மகள் திருமணத்தில் முதல்வர் ஸ்டாலின்: ஷங்கரின் நெகிழ்ச்சியான பதிவு!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா மற்றும் ரோகித் திருமணம் நேற்று நடைபெற்ற நிலையில் இந்த திருமணத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்தினார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வரின் வருகைக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவும் கிரிக்கெட் வீரர் ரோகித்தும் நேற்று திருமணம் செய்து கொண்டனர். சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் நடந்த இந்த திருமணத்தில் 50 பேர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது இந்த நிலையில் இந்த திருமணத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மற்றும் உதயநிதிஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இது குறித்த புகைப்படங்களை நேற்று வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மணமக்கள் முதல்வரின் காலில் விழுந்து ஆசி பெற்றதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன்னர் இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மகளின் திருமணத்தில் கலந்து கொண்ட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு தனது நன்றி என்றும் அவருடைய ஆசிர்வாதம் மணமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகவும் திருமணத்திற்கு வருகை தந்த அவருடைய வருகை மிகவும் அருமையான நிகழ்வு என்றும் அதை தங்களால் மறக்க முடியாது என்றும் அவர் கூறினார். மேலும் இந்த திருமணத்தில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் உதயநிதி எம்எல்ஏ ஆகியோருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஷங்கர் தெரிவித்துள்ளார்.