16 வயது சிறுமி பாலியல் வழக்கில் பாய்ந்த போக்சோ சட்டம்: ஷங்கர் மருமகன் எடுத்த அதிரடி முடிவு!
- IndiaGlitz, [Saturday,October 29 2022]
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மருமகன் மீது 16 வயது சிறுமி கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு காரணமாக அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்ததால் அவர் தற்போது அதிரடி முடிவு எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் ரோகித் என்பவருக்கும் கடந்த 2001ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஷங்கரின் மருமகன் ரோஹித் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனும் மதுரை பாந்தா கிரிக்கெட் அணியின் உரிமையாளரின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 16 வயது சிறுமிக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கும்போது கிரிக்கெட் வீரர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் இது குறித்து அளிக்கப்பட்ட புகாரையடுத்து ஷங்கரின் மருமகன் ரோகித் உள்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் ரோகித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிரடி முடிவு ஒன்றை அறிவித்துள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: நான் மிகவும் ஆழமாக யோசித்து தான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். கிரிக்கெட் தான் எனக்கு அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் கொடுத்தது. எனக்கு மிகப்பெரிய அறிமுகமாகவும் இருந்தது. என் வாழ்வின் முக்கிய அங்கமாக இருக்கும் கிரிக்கெட்டுக்கு நான் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
கடந்த சில மாதங்களாக நடந்த சம்பவங்கள் காரணமாக நான் மன அமைதியையும் என்னுடைய நன் மதிப்பை இழந்து இருக்கின்றேன். தற்போது மிகுந்த மன உளைச்சலில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் என்னை நானே மீண்டுவர தயார்படுத்திக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
இந்த நிலையில் தற்காலிகமாக நான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்திருக்கிறேன். என்னை உருவாக்கிய கிரிக்கெட்டிற்கும், என்னை நம்பி நின்ற அனைவருக்கும், அவதூறு நேரங்களில் கூட எனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கும் நன்றி’ என்று பதிவு செய்துள்ளார்.
ஷங்கரின் மகன் திடீரென கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.