close
Choose your channels

'வேதாளம்' படத்தை பார்த்த சினிமா பிரபலங்கள்

Wednesday, November 11, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜீத் நடித்த 'வேதாளம்' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல பாசிட்டிவ் விமர்சனங்களுடன் வெற்றி நடைபோட்டு கொண்டிருக்கின்றது. நேற்று அதிகாலை முதல்காட்சியை காண அஜீத் ரசிகர்கள் பெருமளவு தியேட்டர்களில் குவிந்திருந்தனர்.

இந்நிலையில் 'வேதாளம்' படத்தை ரசிகர்களை போலவே சினிமா பிரபலங்களும் முதல் நாள் காட்சியை பார்க்க ஆர்வம் கொண்டிருந்தனர். குறிப்பாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், 'வேதாளம்' படத்தின் நாயகி ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன் ஆகியோர்களும் மற்றும் அஜீத்தின் மனைவி ஷாலினியும் நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் முதல் நாளில் 'வேதாளம்' படத்தை கண்டு ரசித்தனர்.

'வேதாளம்' திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் நல்ல ஓப்பனிங் பெற்றுள்ளதாகவும், பாசிட்டிவ் விமர்சனம் காரணமாக திரையரங்குகள் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment