'நான் சம்பாதித்த உண்மையான செல்வம் இதுதான்.. ஷங்கரின் வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Friday,August 04 2023]

இயக்குனர் ஷங்கர் தனது சக இயக்குனர்களை சந்தித்து பேசிய நிகழ்வை குறிப்பிட்டு ’நான் சம்பாதித்த உண்மையான செல்வம் இதுதான்’ என நெகிழ்ச்சியுடன் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இயக்குனர் மணிரத்னம் வீட்டில் பிரபல இயக்குனர்கள் சந்திக்கும் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. இயக்குனர்கள் ஷங்கர், ஏஆர் முருகதாஸ், லோகேஷ் கனகராஜ், சசி, கௌதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், லிங்குசாமி உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்

இந்த நிகழ்வின்போது இயக்குநர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது. இது குறித்த புகைப்படத்தை ஷங்கர் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.

ஒரு சிறப்பான மாலை நேரத்தை கொண்டாட ஏற்பாடு செய்த மணிரத்னம் அவர்களுக்கு எனது நன்றி. இந்த சிறந்த கொண்டாட்டத்தில் சக இயக்குனர்களிடம் பழகியது, திரைப்படங்களை உருவாக்கும் போது ஏற்பட்ட நினைவுகளை பகிர்வது, உள்ளிட்ட சிறப்பான அனுபவம் கிடைத்தது.

மேலும் இளையராஜா மற்றும் ஏஆர் ரகுமானின் சில எவர்க்ரீன் பாடல்களையும் கேட்கும் தருணம் கிடைத்தது. இந்த தருணம் தான் நான் உண்மையாக சம்பாதித்த செல்வமாக கருதுகிறேன். எங்களை சிறப்பாக உபசரித்த சுஹாசினி அவர்களுக்கும் எனது நன்றி’ என்று ஷங்கர் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

'டிடி ரிட்டர்ன்ஸ்' வெற்றியை அடுத்து ரிலீஸ் ஆகும் சந்தானம் அடுத்த படம்..!

நடிகர் சந்தானம் நடித்த 'டிடி ரிட்டன்ஸ்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்றும் இந்த படம் நல்ல வசூலையும் பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

'தி கேரளா ஸ்டோரி' படத்தில் நடித்த நடிகை மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு..?

சமீபத்தில் வெளியான 'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

'குட் நைட்' தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம்.. கிளாப் அடித்து தொடங்கி வைத்த விஜய்சேதுபதி..!

நடிகர் மணிகண்டன் நடித்த 'குட் நைட்'  திரைப்படம் கடந்த மே மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம்  வசூல் அளவில் மிகப்பெரிய லாபத்தை பெற்றதாகவும் கூறப்பட்டது.

இயற்கை மீது இவ்வளவு அக்கறையா? பிகினி உடையில் பிரச்சாரம் செய்த நடிகை எமி ஜாக்சன்

தமிழ் சினமா ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பு பெற்ற நடிகையான எமி ஜாக்சன் தன்னுடைய இன்ஸ்டா பதிவில் உணவு மற்றும் இயற்கை குறித்த முக்கியமான கருத்து

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் அசோக் சக்ரா விருது பெற்ற பிரபலத்தின் வாழ்க்கை வரலாறா?

சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர்  ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.