'இந்தியன் 2' படத்தை முடித்து கொடுக்க சம்மதம் தெரிவித்தாரா ஷங்கர்?

  • IndiaGlitz, [Thursday,April 22 2021]

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’இந்தியன் 2’, இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெறாமல் இருந்ததை அடுத்து இயக்குனர் ஷங்கர், ராம் சரண்தேஜா நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றை இயக்க சென்றுவிட்டார்

இதனை அடுத்து தங்கள் நிறுவனம் தயாரிக்கும் ’இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு படத்தை இயக்கக் கூடாது என்று லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட் வேறு படங்களை ஷங்கர் இயக்க கூடாது என இடைக்கால தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டது

இதனையடுத்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின்போது ’இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் வேறு படத்தை இயக்க தடை விதிக்க கோரிய வழக்கில் இயக்குனர் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனம் ஆகிய இரண்டு தரப்பும் பேசித் தீர்த்துக் கொள்ள உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது

இதனை அடுத்து இயக்குனர் ஷங்கர் ஜூலை முதல் அக்டோபர் வரை நேரம் கிடைக்கும் என்பதால் அந்த சமயத்தில் ’இந்தியன் 2’ படத்தை முடித்துக் கொடுக்க முயற்சிக்கிறேன்’ என்று நீதிமன்றத்தில் கூறியுள்ளார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

More News

பிச்சை கூட எடுங்க,திருடுங்க ...! உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு பளார் கேள்வி....!

ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வருவதால், பிச்சை கூட எடுங்க, பரவாயில்ல என உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு பளார் கேள்வி கேட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் தயாரிப்புக்காக மீண்டும் திறக்கலாம்… மத்திய அரசு!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் பெற்று வருகிறது.

தாண்டவமாடும் கொரோனா...! மஹாராஷ்டிராவில் வரும் புதிய கட்டுப்பாடுகள்...!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால், இன்று இரவு முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளன. 

ஒரு உடைக்கு இத்தனை லட்சமா? பாலிவுட் நடிகையின் தெறிக்கவிடும் பேஷன் பிக்!

தமிழில் தளபதி விஜய் நடித்த “தமிழன்” படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. உலக அழகிப் பட்டம் வென்ற இவர் இந்தி சினிமா, அடுத்து ஹாலிவுட் என்று ரவுண்டு கட்டி கலக்கி வருகிறார்.

குத்துச்சண்டை வீரருக்கு மீன்குழம்பு விருந்து அளித்த எம்.ஜி.ஆர்… எழுச்சி ஊட்டும் ஆடியோ!

குத்துச் சண்டை போட்டிகளில் மறக்க முடியாத ஒரு பெயர் முகமது அலி. அமெரிக்க குத்துச்சண்டை வீரரான முகமது அலி கலந்து கொண்ட போட்டிகளைப் பார்த்து இன்றைய தலைமுறை இளைஞர்களும் மிரண்டு போகின்றனர்.