close
Choose your channels

'மாவீரன்' படத்தின் மகள் அதிதி நடிப்பு.. ஷங்கர் என்ன சொன்னார் தெரியுமா?

Saturday, July 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின் நடிப்பில், மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான ’மாவீரன்’ திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதை பார்த்தோம்.

இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சியை பல திரையுலக பிரபலங்கள் பார்த்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் ஷங்கர், நேற்று இந்த படத்தை பார்த்த நிலையில் தற்போது அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

இயக்குனர் மடோன் அஸ்வின் புத்திசாலித்தனமான எழுதப்பட்ட திரைக்கதையில் ’மாவீரன்’ படம் கம்பீரமாக உள்ளது. பொழுதுபோக்கு மற்றும் அற்புதமான நகைச்சுவை உணர்வை அவர் திரைக்கதையில் மிகச் சரியாக புகுத்தியுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பு மிகவும் பாராட்டத்தக்கது. அதிதி தனக்கு கொடுக்கப்பட்டதை நன்றாக செய்து உள்ளார். சரிதா, யோகி பாபு, மிஷ்கின் ஆகியோர் சிறப்பாக தங்கள் கேரக்டரில் நடித்துள்ளனர்.

ஆக்சன் காட்சிகள் மற்றும் நடனம் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. இந்த படத்திற்காக கடுமையாக உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள். குடும்பத்துடன் பார்த்தால் நிச்சயமாக ஒரு புதிய அனுபவத்தை பெற முடியும். இவ்வாறு ஷங்கர் படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளதை அடுத்து படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment