'கல்கி' போல் குறைந்த நேரம் தான் 'இந்தியன் 2' படத்தில் வருகிறாரா கமல்? ஷங்கர் விளக்கம்..!

  • IndiaGlitz, [Tuesday,July 09 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன் 2’ திரைப்படம் வரும் வெள்ளி என்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசன் படம் முழுவதும் வருகிறார் என்று ஷங்கர் சமீபத்தில் அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார்.

’இந்தியன் 2’ படத்தின் புரமோஷன் விழாவில் கமல்ஹாசன் சமீபத்தில் பேசியபோது ’இந்தியன் 2’ படத்தில் நடிக்க காரணமே ’இந்தியன் 3’ திரைப்படத்தின் கதை தான் என்று கூறியிருந்தார். இதனால் அவர் ’இந்தியன் 2’ படத்தில் குறைந்த நேரமே வருவார் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியான நிலையில் இது குறித்து ஷங்கர் ஐதராபாத்தில் நடந்த புரமோஷன் விழாவின்போது விளக்கம் அளித்துள்ளார்.

’இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசன் படம் முழுவதும் வருவார் என்றும் அவர் திரையில் இல்லாத நேரத்தில் கூட அவரது கேரக்டர் குறித்து தான் மற்றவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

இதை அடுத்து’ கல்கி 2898 ஏடி’ படம் போல ஒரு சில நிமிடங்கள் மட்டுமே கமல் ’இந்தியன் 2’ படத்தில் வருவார் என்று கூறியது முழுக்க முழுக்க வதந்தி என்றும் முழு நேரமும் கமல்ஹாசன் இந்த படத்தில் வருவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ‘இந்தியன் 3’ திரைப்படத்தில் இந்தியன் தாத்தா சேனாதிபதியின் தந்தை கேரக்டரிலும் கமல் நடிக்கிறார் என்றும் இந்த படம் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.

More News

செல்வ வளத்தை அள்ளி வார வாஸ்து ரகசியங்கள்! - ஆன்மீகக்ளிட்ஸில் வாஸ்து நிபுணர் ஹேமலதா சந்திரசேகரன்

வீட்டில் நிலையான செல்வ வளத்தை ஈர்க்கவும், வாழ்வில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தவும் வாஸ்து சாஸ்திரம் உதவும் என்று நம்பப்படுகிறது.

இப்ப தான் திருமணம்.. அதற்குள்ளாகவா.. பிரேம்ஜியின் 'பேபி' பதிவு வைரல்..!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் திருமணம் ஆனது முதல் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியுடன் இருக்கும் ரொமான்ஸ்

அவர் எங்களை விட்டு செல்லவில்லை.. இன்னும் இருக்கிறார்.. பாலசந்தர் பிறந்த நாளில் கமல் வெளியிட்ட வீடியோ..!

இன்று இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கமல்ஹாசன் தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

11 ஆண்டுகளாக முடங்கியிருந்த விஷால் படம் ரிலீஸ் ஆகிறதா? லேட்டஸ்ட் அப்டேட்..!

விஷால் நடித்த திரைப்படம் கடந்த 11 ஆண்டுகளாக ரிலீசாகாமல் முடங்கி இருந்த நிலையில் தற்போது இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

7 மொழிகளில் த்ரிஷாவின் அடுத்த படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நடிகை த்ரிஷா தென் இந்திய திரை உலகில் பிசியான நடிகையாக இருந்து வரும் நிலையில் அவர் நடித்த படம் நேரடியாக ஓடிடியில் 7  மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது