'இந்தியன் 2' கமலின் மாஸ் புகைப்படத்தை வெளியிட்ட ஷங்கர்.. என்ன ஒரு கம்பீரம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
சுதந்திர போராட்ட கதையம்சம் கொண்ட இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இன்றைய சுதந்திர தினத்தில் இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் மாஸ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் கமல் கம்பீரமாக இருக்கும் காட்சி உள்ளது. சுதந்திர தின வாழ்த்துக்கள் என்ற அறிவிப்புடன் வெளியாகி இருக்கும் இந்த புகைப்படம் மிகப் பெரிய அளவில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதேபோல இயக்குனர் ஷங்கர், மகாத்மா காந்தி புகைப்படத்தின் பின்னணியில் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ’கேம் சேஞ்சர்’ படத்தின் படப்பிடிப்பில் எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு புகைப்படங்களும் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகின்றன.
கமல்ஹாசன், விவேக், சித்தார்த், எஸ்ஜே சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானிசாகர், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா, மனோபாலா, சமுத்திரக்கனி, ஜார்ஜ் மரியான், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திரக் கூட்டம் ’இந்தியன் 2’ படத்தில் நடித்துள்ளது. ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.
#INDIAN2 pic.twitter.com/rhStm6ISLD
— Shankar Shanmugham (@shankarshanmugh) August 15, 2023
HAPPY INDEPENDENCE DAY from the sets of #GameChanger pic.twitter.com/w5t1nzmHWj
— Shankar Shanmugham (@shankarshanmugh) August 15, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments