அக்சயகுமாருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க மறுத்த ஷங்கர்

  • IndiaGlitz, [Saturday,January 27 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சயகுமார் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ள '2.0' படத்தின் போஸ்ட் புரடொக்ச்ன்ஸ் மற்றும் VFX பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது டப்பிங் பணிகள் நடந்து வருவதாக தெரிகிறது.

இந்த படத்திற்காக ஏற்கனவே ரஜினிகாந்த் தனது இரண்டு கேரக்டர்களான சிட்டி மற்றும் வசீகரன் கேரக்டர்களுக்கு டப்பிங் செய்து முடித்துவிட்ட நிலையில் தற்போது அக்சயகுமார் கேரக்டருக்கு தமிழ் குரல் கொடுக்க சரியான நபரை ஷங்கர் தேடி வருகிறார். ஒரு முன்னணி நடிகரிடம் அக்சயகுமாரின் கேரக்டருக்கு குரல் கொடுக்க பேச்சுவார்த்தை  நடந்து வந்ததாகவும், அவர் பிசி காரணமாக இந்த வாய்ப்பை அந்த நடிகர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அக்சயகுமாரே தனது கேரக்டருக்கு தமிழில் பேச முன்வந்ததாகவும், ஆனல் அதற்கு வாய்ப்பு கொடுக்க ஷங்கர் மறுத்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. விரைவில் அவரது கேரக்டருக்கு வாய்ஸ் கொடுக்க ஒருவர் முடிவு செய்யப்படுவார் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.