close
Choose your channels

இசைக்காக பாய்ஸ் பட நடிகருடன் மீண்டும் கைகோர்த்த இயக்குனர் சங்கர்....!

Monday, July 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராம் சரண் நடிக்கும் படத்திற்கு, இசையமைப்பாளர் தமன் இசையமைக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இயக்குனர் சங்கரின் இந்தியன்2 திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதனால் நடிகர் ராம் சரண் 15-வது படத்தை இவர் இயக்குகிறார். சென்ற வாரம் சென்னை வந்த ராம்சரண், தில் ராஜு உள்ளிட்டோர் சங்கரை சந்தித்ததால், படம் எடுப்பது உறுதியானது. இப்படத்தில் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர்-ம், தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தமனும் இணைந்துள்ளனர்.

கடந்த 2003-ஆம் ஆண்டில் பலரிடம் வரவேற்பு பெற்ற, பாய்ஸ் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் தமன். இதையடுத்து ஈரம் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதன் பின் தமிழ் உள்ளிட்ட சில மொழிகளில் பல வெற்றிப்படங்களை தமன் இசையமைத்திருந்தார். இதேபோல் ராம்சரணின் ‘புருஸ்லீ’ படத்திற்கும் இவர்தான் இசையமைப்பாளர். கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து தமன், ஷங்கர் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment