இசைக்காக பாய்ஸ் பட நடிகருடன் மீண்டும் கைகோர்த்த இயக்குனர் சங்கர்....!

  • IndiaGlitz, [Monday,July 19 2021]

ராம் சரண் நடிக்கும் படத்திற்கு, இசையமைப்பாளர் தமன் இசையமைக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இயக்குனர் சங்கரின் இந்தியன்2 திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதனால் நடிகர் ராம் சரண் 15-வது படத்தை இவர் இயக்குகிறார். சென்ற வாரம் சென்னை வந்த ராம்சரண், தில் ராஜு உள்ளிட்டோர் சங்கரை சந்தித்ததால், படம் எடுப்பது உறுதியானது. இப்படத்தில் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர்-ம், தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தமனும் இணைந்துள்ளனர்.

கடந்த 2003-ஆம் ஆண்டில் பலரிடம் வரவேற்பு பெற்ற, பாய்ஸ் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் தமன். இதையடுத்து ஈரம் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதன் பின் தமிழ் உள்ளிட்ட சில மொழிகளில் பல வெற்றிப்படங்களை தமன் இசையமைத்திருந்தார். இதேபோல் ராம்சரணின் ‘புருஸ்லீ’ படத்திற்கும் இவர்தான் இசையமைப்பாளர். கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து தமன், ஷங்கர் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'என்ன சொல்லப் போகிறாய்' படப்பிடிப்பு துவங்கியது...!

சின்னத்திரையில் பிரபலங்களான  அஸ்வின் மற்றும் புகழின், என்ன சொல்ல போகிறாய் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.  

விஜய்யின் மேல்முறையீட்டு மனு: நீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கை!

நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய் கார் குறித்த வரி வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளித்த தனி நீதிபதி, விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.

லிங்குசாமி தெலுங்கு படத்தின் வில்லன் இந்த தமிழ் ஹீரோ தான்: அதிரடி அறிவிப்பு!

ஆனந்தம், ரன், அஞ்சான் உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் லிங்குசாமி அடுத்ததாக தெலுங்கு பிரபல நடிகர் ராம்பொத்தினேனி நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார்

பா ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தின் டைட்டில், ஹீரோ குறித்த தகவல்!

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'சார்பாட்டா பரம்பரை' என்ற திரைப்படம் வரும் 22ஆம் தேதி அமேசானில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே

கணவர், குழந்தையுடன் விஜய்யின் 'யூத்' பட நடிகை: வைரல் புகைப்படங்கள்!

தளபதி விஜய் நடித்த 'யூத்' திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் இந்த படத்தின் நாயகி சாஹின்கான் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது