ஷங்கர் - ராம்சரண் தேஜாவின் 'கேம் சேஞ்சர்': அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

  • IndiaGlitz, [Monday,March 27 2023]

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்திற்கு ’கேம் சேஞ்சர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் இன்று காலை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன் அந்த போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ராம்சரண் தேஜாவின் அட்டகாசமான லுக் கொண்ட இந்த போஸ்டர் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த படத்தின் டைட்டில் வீடியோவில் இந்த படம் ஒரு தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்டது என்பது உறுதி செய்யப்பட்டது. அதேபோல் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரிலும் செஸ் விளையாட்டில் ராஜாவின் புகைப்படம் உள்ளதை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தில் ராஜூ தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ராம்சரண் தேஜா, க்யாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரகனி, எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் கதையில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவில் சமீர் முகமது படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

கார்த்தியின் அடுத்த பட இயக்குனர் இவர் தான்: சென்னையில் இன்று பூஜை..!

நடிகர் கார்த்தியின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ள உள்ள நிலையில் இன்று சென்னையில் இந்த படத்தின் பூஜை நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

'பொன்னியின் செல்வன் 2' படத்தை தமிழகத்தில் வெளியிடும் நிறுவனம்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

'பொன்னியின் செல்வன் 2' படத்தை தமிழகத்தில் வெளியிடும் நிறுவனம்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஹாலிவுட் நடிகை ரிஹான்னா பாணி போட்டோஷூட்.. நடிகை காயத்ரி சங்கர் லேட்டஸ்ட் பதிவு..!

நடிகை காயத்ரி சங்கரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோள் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த பதிவு மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.

பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலையில் முன்னேற்றமா? டுவிட்டரில் அப்டேட் தந்த குடும்பத்தினர்..!

பிரபல கர்நாடக இசை பாடகி பாம்பே ஜெயஸ்ரீ லண்டன் சென்று இருந்த போது அங்கு ஏற்பட்ட எதிர்பாராத விபத்து காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை பார்த்தோம்.

'ரோஜா' நடிகை மதுபாலாவுக்கு இவ்வளவு பெரிய மகள்களா? வைரல் புகைப்படங்கள்..!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'ரோஜா' படத்தில் நாயகியாக நடித்த மதுபாலாவின் இரண்டு மகள்களின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.