ஷங்கர் - ராம்சரண் தேஜாவின் 'கேம் சேஞ்சர்': அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்திற்கு ’கேம் சேஞ்சர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் இன்று காலை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன் அந்த போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
ராம்சரண் தேஜாவின் அட்டகாசமான லுக் கொண்ட இந்த போஸ்டர் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த படத்தின் டைட்டில் வீடியோவில் இந்த படம் ஒரு தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்டது என்பது உறுதி செய்யப்பட்டது. அதேபோல் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரிலும் செஸ் விளையாட்டில் ராஜாவின் புகைப்படம் உள்ளதை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
தில் ராஜூ தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ராம்சரண் தேஜா, க்யாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரகனி, எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் கதையில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவில் சமீர் முகமது படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
I couldn’t have asked for a better birthday gift !! #GameChanger
— Ram Charan (@AlwaysRamCharan) March 27, 2023
Thank you @shankarshanmugh sir!! @SVC_official @advani_kiara @DOP_Tirru @MusicThaman pic.twitter.com/V3j7svhut0
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout