close
Choose your channels

3D-யில் ரஜினி-ஷங்கரின் 'எந்திரன் 2'?

Tuesday, September 29, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், 'ஐ' படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 'எந்திரன் 2' படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை பார்த்து வருகிறார். இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் தயாராகிவிட்ட நிலையிலும், ரஜினியை தவிர இன்னும் மற்ற நடிகர்கள் உறுதி செய்யப்படவில்லை.

இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் ஒருவரிடமும், அதேபோல் நாயகியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகையுடனும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்நிலையில் 'எந்திரன் 2' படத்தை முழுக்க முழுக்க 3Dயில் எடுக்க ஷங்கர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. முதன்முதலாக ரஜினிகாந்த் நடிக்கும் 3D படம் என்பதால் காட்சிகளும் 3Dக்கு ஏற்றவாறு பிரமாண்டமாக உருவாக்க ஷங்கர் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், பாலிவுட் வில்லன் நடிகர், பாலிவுட் நாயகி மற்றும் உயர்தர டெக்னீஷியன்கள், உலக தரத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் ஆகியவை இந்த படத்தில் ஒருங்கே அமையவிருப்பதாகவும், இதனால் இந்த படத்தின் பட்ஜெட் ரூ.250 கோடியை தாண்டிவிடும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment