'எந்திரன் 2': அர்னால்ட் நிபந்தனையை ஷங்கர் ஏற்பாரா?

  • IndiaGlitz, [Wednesday,November 04 2015]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விரைவில் 'எந்திரன் 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ரஜினிகாந்த், அர்னால்ட், எமிஜாக்சன் நடிக்கவுள்ள இந்த படத்தின் திரைக்கதையை ஷங்கர் முழுவதும் தயார் செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஷங்கரின் ஸ்கிரிப்ட்டில் ஹாலிவுட் திரைக்கதையாசிரியர்களின் உதவியால் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்றும் அர்னால்ட் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

திரைக்கதை விஷயத்தில் யாருக்காகவும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ள விரும்பாத இயல்பு கொண்ட ஷங்கர், அர்னால்ட் கூறிய ஆலோசனையை ஏற்றுக்கொள்வாரா? என்பதுதான் தற்போதைய 'எந்திரன் 2' குழுவினர்களின் ஹாட் செய்தியாக உள்ளது.

முழுக்க முழுக்க 3D தொழில்நுட்பத்தில் உருவாகவுள்ள இந்த படத்திற்காக படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, சமீபத்தில் மும்பையில் 3D ஷாட்கள் எடுத்ததாக கூறப்படுகிறது. 'பாகுபலி' புகழ் ஸ்ரீனிவாஸ் மோகன் இந்த படத்திற்கு கிராபிக்ஸ் பணிகளை செய்யவுள்ளார் என்பது ஏற்கனவே அனைவரும் அறிந்ததே.

More News

தேசிய விருது பெற்ற நடிகரின் நிச்சயதார்த்த தேதி

பீட்சா, சூது கவ்வும், நேரம் போன்ற படங்களில் நடித்த நடிகர் பாபிசிம்ஹா, 'ஜிகர்தண்டா' படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்...

ரஜினி-விஜய் படங்களின் வியாபாரம் தொடக்கம்?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்கள் என்றாலே வியாபாரம் பிரம்மாண்டமாகத்தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. 17 வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த ரஜினியின் 'படையப்பா'...

இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் ஏ.எம்.ரத்னம்

கமல், அஜீத், விஜய், சிரஞ்சீவி, பவண்கல்யாண் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படங்கள் தயாரித்த முன்னணி தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னம்...

கமல்ஹாசன் படத்திற்கு சிங்கப்பூரில் ஏற்பட்ட சிக்கல்

உலக நாயகன் கமல்ஹாசன், த்ரிஷா நடித்த 'தூங்காவனம்' திரைப்படம் வரும் 10ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது...

விஜய்க்கு ஜோடியாகும் நண்பனின் நாயகி?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது...