இன்று முதல் ஷங்கரின் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் '2.0' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் அவர் இயக்கவுள்ள அடுத்த படம் என்னவாக இருக்கும் என்பது குறித்து பல்வேறு ஊகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் இன்று ஷங்கரின் அடுத்தபடத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. அதாவது அவரது தயாரிப்பில் உருவாகவுள்ள 'இம்சை அரசன் 2ஆம் புலிகேசி' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த தகவலை ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.
அந்த வீடியோவில், 'ராஜாதி ராஜ....ராஜ மார்த்தாண்ட...ராஜ கம்பீர...ராஜகுல திலக...ராஜ குலோத்துங்க...ராஜ பாராக்கிரம...ராஜ வைராக்ய..மாமன்னர் பராக் பராக் பராக்... நாளை முதல் 'ராஜ பார்வை' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவன் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கவுள்ளார். வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரன் இசையமைக்கவுள்ளார். முதல் பாகம் போலவே இந்த இரண்டாம் பாகமும் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#iA24P https://t.co/0ns6XHLCIe
— Shankar Shanmugham (@shankarshanmugh) August 22, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com