அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர் ஷங்கர்.. மாஸ் போஸ்டர் ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Saturday,September 07 2024]

ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில், அவரது இயக்கத்தில் உருவாகி வரும் இன்னொரு திரைப்படமான ’கேம் சேஞ்சர்’படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளதோடு, மாஸ் போஸ்டரும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கடந்த சில மாதங்களாக ’இந்தியன் 2’மற்றும் ’கேம் சேஞ்சர்’ ஆகிய இரண்டு திரைப்படங்களையும் ஒரே நேரத்தில் இயக்கி வந்தார் என்பதும் ’இந்தியன் 2’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அடுத்த கட்டமாக தற்போது ’கேம் சேஞ்சர்’ படத்தின் படப்பிடிப்பில் அவர் உள்ளார் என்றும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட நிலையில் அடுத்த கட்டமாக புரமோஷன் பணிகள் தொடங்கி வரும் நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது சிங்கிள் பாடல் செப்டம்பரில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்து உள்ளார் என்பதும் அவர் கம்போஸ் செய்த பாடல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராம்சரண், அஞ்சலி, கைரா அத்வானி, எஸ் ஜே சூர்யா, ஸ்ரீகாந்த், ஜெயராம், சுனில், சமுத்திரகனி, பிரகாஷ்ராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் சுமார் 450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் கதையில் திரு ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 

More News

தமிழை தாண்டி வேறு மொழி படத்தில் ஹீரோயின் ஆன அதிதி ஷங்கர்.. ஹீரோ யார் தெரியுமா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் தமிழில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது வேறு மொழியிலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

நீலக்கடல் பின்னணியில் நீல நிற தேவதையாக ரம்யா பாண்டியன்.. லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

நீலக்கடலின் பின்னணியில் நீல நிற காஸ்ட்யூம் அணிந்து தேவதை போல் இருக்கும் ரம்யா பாண்டியன் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

நடிகை கனிகாவுக்கு என்ன ஆச்சு? முகமெல்லாம் தீக்காயம்.. அவரே கொடுத்த விளக்கம்..!

நடிகை கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகத்தில் தீக்காயம் உள்ள புகைப்படங்களை பதிவு செய்து அதற்கு விளக்கம் கொடுத்து உள்ள நிலையில் அந்த  புகைப்படங்களுக்கு

'கங்குவா' ரிலீஸ் தேதி மாற்றத்திற்கு இதுதான் காரணம்: தனஞ்செயன் பேட்டி..!

சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அதே தேதியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

'கோட்' படத்தில் சிவகார்த்திகேயன் காட்சிகள் நீக்கப்பட்டதா? வெங்கட் பிரபு சொல்வது என்ன?

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சில காட்சிகளில் தோன்றுவார் என்பதும் அந்த காட்சிகள் உள்ளர்த்தம் கொண்டவையாக இருக்கும் என்பதும்