ஷங்கரின் 'இந்தியன் 2' படப்பிடிப்பு தொடங்கும் தேதி
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரமாண்டம் என்றால் என்ன? என்பதற்கு உதாரணமாக திகழும் இயக்குனர் ஷங்கர் இயக்கிய '2.0' இன்று உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களில் இதுவரை ஒரு நெகட்டிவ் விமர்சனம் கூட இந்த படத்திற்கு கிடைக்கவில்லை. ரஜினியை பிடிக்காதவர்கள் கூட இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் ஷங்கர் இயக்கவுள்ள அடுத்த படமான 'இந்தியன் 2' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கப்பட்டு கமல்ஹாசனின் போட்டோஷுட் பணியும் முடிவுற்றது. இந்த படத்திற்கான செட் அமைக்கும் பணிகளும் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கும் என்ற தகவல் வெளிவந்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு படப்பிடிப்பு தொடங்குமுன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout