close
Choose your channels

'வேள்பாரிக்கு' முன் ஷங்கரின் இன்னொரு படம்.. மீண்டும் இவர் தான் நாயகனா?

Monday, July 31, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ மற்றும் ராம்சரண் தேஜா நடித்து வரும் ’கேம் சேஞ்சர்’ ஆகிய திரைப்படங்களை இயக்கி வருகிறார் என்பதும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் 'கேம் சேஞ்சர்’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு ஷங்கர் அடுத்ததாக ’வேள்பாரி’ என்ற படத்தை இயக்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியானது.

இந்த படம் மூன்று பாகங்களாக வெளியாக இருப்பதாகவும் இந்தியாவின் முக்கிய மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தின் பட்ஜெட் மிகப்பெரியதாக இருக்கும் கூற வேண்டும் கூறப்பட்டது.

மதுரை எம்பி வெங்கடேசன் எழுதிய ’வேள்பாரி’ என்ற நாவலின் அடிப்படையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ’வேள்பாரி’ படத்திற்கு முன்பே ஷங்கர் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அதில் ’கேம் சேஞ்சர்’ படத்தின் நாயகன் ராம்சரண் தேஜா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் அறிவிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது . இது ஒரு குறுகிய கால தயாரிப்பு என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment