நீண்ட இடைவெளிக்கு பின் 'இந்தியன்' நாயகியை சந்தித்த ஷங்கர்.. எமோஷனல் பதிவு..!

  • IndiaGlitz, [Tuesday,April 09 2024]

ஷங்கர் இயக்கத்தில் உருவான ‘இந்தியன்’ திரைப்படம் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அந்த படத்தின் நாயகியை அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் மனிஷா கொய்ராலா நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவான திரைப்படம் ’இந்தியன்’. கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் நாயகி ஆக நடித்த மனிஷா கொய்ராலாவை இயக்குனர் ஷங்கர் மும்பையில் தற்போது சந்தித்துள்ள புகைப்படம் மனிஷா கொய்ராலாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.

இந்த பதிவில் மனிஷா கொய்ராலா எமோஷனலாக ’நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷங்கர் அவர்களை மும்பையில் சந்தித்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது சந்திப்பு எனக்கு மறக்க முடியாத ஒரு நிகழ்வு என்றும் குறிப்பிட்டுள்ளார். மனிஷா கொய்ராலாவின் இந்த எமோஷனல் பாதிப்பு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

இயக்குனர் ஷங்கர் தனது மகள் திருமணத்திற்காக பிரபலங்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வரும் நிலையில் மனிஷா கொய்ராலாவுக்கு மறக்காமல் அழைப்பிதழ் கொடுத்துள்ளதாக தெரிகிறது. ‘இந்தியன்’ படத்தை அடுத்து கடந்த 1999 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கிய 'முதல்வன்’ படத்திலும் மனிஷா கொய்ராலா நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'கோட்' படத்தில் சிஎஸ்கே ரசிகராக நடிப்பது இந்த பிரபலமா? தரமான சம்பவம் இருக்குது..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' திரைப்படத்தில் சிஎஸ்கே அணியின் ரசிகராக பிரபலம் ஒருவர் நடித்திருப்பதாக தகவல் வெளிவந்திருப்பதை அடுத்து இந்த படத்தில் ஒரு சம்பவம் இருக்கிறது என்று ரசிகர்கள் தெரிவித்து

பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு அஜித் கொடுத்த மிகப்பெரிய பரிசு.. ரூ.35 லட்சம் மதிப்புடையதா?

பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு நடிகர் அஜித் ரூபாய் 35 லட்சம் மதிப்புள்ள சிறப்பு பரிசை வழங்கி உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'தலைவர் 171' திரைப்படத்தில் இந்த 5 பிரபலங்களா? மல்டி ஸ்டார் படம் என உறுதி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'தலைவர் 171' படத்தில் 5 பிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

ஒரு செய்தி வாசிப்பாளருக்குள் இவ்வளவு இரகசியங்கள் மற்றும் திறமைகளா ?

என்னுடைய சுகத் துக்கங்களை எல்லாம் மறைத்து அந்த இடத்தில் ஒரு செய்தி வாசிப்பாளராக எனது சிறப்பை வேலையின் ஈடுபாட்டை கொடுக்க வேண்டும் என நினைத்தேன் மேலும் கொடுத்தேன்...

விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சியில் டிடிஎப் வாசன் காதலியா? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் டிடிஎஃப் வாசன் காதலி போட்டியாளராக பங்கேற்க இருப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.