கம்பீரமாக குதிரை சவாரி செய்யும் இயக்குனர் ஷங்கர்.. மாஸ் புகைப்படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ மற்றும் ராம்சரண் தேஜா நடித்துவரும் ’ஆர்சி 15’ ஆகிய இரண்டு படங்களையும் இயக்கி வருகிறார் என்பதும் இரண்டு படங்களின் படப்பிடிப்பிலும் அடுத்தடுத்து கலந்து கொண்டு வருகிறார் என்பதும் தெரிந்ததே.
சமீபத்தில் ’இந்தியன் 2’ படத்தின் திருப்பதி படப்பிடிப்பு முடிந்த பின்னர் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் தென்னாப்பிரிக்கா செல்ல உள்ளனர் என்பதும் இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ராம்சரண் தேஜா, க்யாரா அத்வானி நடிப்பில் உருவாகி வரும் ’ஆர்சி 15’ படத்தின் படப்பிடிப்பில் தற்போது ஷங்கர் கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் ஷங்கர் தனது சமூக வலைதளத்தில் குதிரையில் சவாரி செய்யும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து மீண்டும் ஆர்சி 15 படபிடிப்பு கலந்து கொண்டேன் என்று தெரிவித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.
தில் ராஜு தயாரிப்பில் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் உருவாக்கி வரும் ஆர்சி 15 படம் அனிருத் இசையில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
A journey that has me back to back in the saddle!
— Shankar Shanmugham (@shankarshanmugh) March 19, 2023
Towards #RC15 pic.twitter.com/spv0c18y9R
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com