ஜூலை 21ல் வெளியாகும் ஷங்கரின் அடுத்த படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ’கேம் சேஞ்சர்’ மற்றும் ’இந்தியன் 2’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் அவருடைய எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் திரைப்படம் ஒன்றின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் ’இந்தியன் 2’ மற்றும் ராம்சரண் ராஜா நடிப்பில் உருவாகி வரும் ’கேம் சேஞ்சர்’ ஆகிய இரண்டு திரைப்படங்களை மாறி மாறி ஷங்கர் இயக்கி வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் ஷங்கரின் உதவியாளர்களில் ஒருவர் வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அநீதி’ என்ற திரைப்படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'அநீதி’ படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வரும் ஜூலை 21 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் தமிழ் ரிலீஸ் உரிமையை எல்மா பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வசந்தபாலன் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவாகி உள்ள இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் துஷாரா விஜயன் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் காளி வெங்கட் , வனிதா, சாரா அர்ஜுன் உட்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Best Wishes.. #Aneethi to be released by Dir @shankarshanmugh #SPictures dubbed in Telugu as #BloodAndChocolate
— Sri Venkateswara Creations (@SVC_official) July 1, 2023
In cinemas from July 2️⃣1️⃣st 📌
A @Vasantabalan1 film@gvprakash @iam_arjundas @officialdushara @edwinsakaydop @arjunchdmbrm @UBoyzStudios @thinkmusicindia @onlynikil pic.twitter.com/p60TPOSHyr
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments