ஒரே நேரத்தில் 'இந்தியன் 2' - 'ஆர்சி 15': இயக்குனர் ஷங்கரின் வேற லெவல் பிளான்!

  • IndiaGlitz, [Wednesday,September 14 2022]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ஒரே நேரத்தில் ’இந்தியன் 2’ மற்றும் ’ஆர்சி 15’ ஆகிய இரண்டு படங்களையும் மாறி மாறி வரும் நிலையில் தற்போது வேற லெவலில் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் ஷங்கர் தனது முன்னாள் உதவி இயக்குனர்களாகிய வசந்தபாலன், சிம்புதேவன் மற்றும் அறிவழகன் ஆகிய மூவரையும் ’இந்தியன் 2’ படத்தில் இணைத்து உள்ளதாகவும் ஷங்கரின் மேற்பார்வையில் முக்கிய காட்சிகளை மூவரும் இயக்குவார்கள் என்று கூறப்படுகிறது. கமல்ஹாசன் காட்சிகளை மட்டும் ஷங்கர் நேரடியாக இயக்குவார் என்றும் மற்ற காட்சிகளை ஷங்கரின் அறிவுறுத்தலின்படி மேற்கண்ட மூவரும் இயக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பில் இருந்து வசந்தபாலன், சிம்புதேவன் மற்றும் அறிவழகன் இணைவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரே நேரத்தில் ’இந்தியன் 2’மற்றும் ’ஆர்சி 15’ என்ற இரண்டு பெரிய பட்ஜெட் படங்களை இயக்குவதால் ஷங்கர் இந்த வேற லெவல் திட்டத்தை வகுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ’இந்தியன் 2’ படத்தின் 40 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், மீதமுள்ள படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத்தி சிங், பாபி சிம்ஹா உள்பட பலர் நடிப்பில் உருவாகும் இந்தபடம் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.