ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' ரிலீஸ் தேதி மாற்றமா? புதிய தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஷங்கர் இயக்கத்தில் உருவான ‘கேம் சேஞ்சர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் கிறிஸ்துமஸ் விருந்தாக டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராம்சரண் தேஜா நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் தேவி ஸ்ரீபிரசாத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’. இந்த படம் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் உருவான நிலையில் தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்த படத்தில் கைரா அத்வானி, அஞ்சலி, எஸ் ஜே சூர்யா, ஸ்ரீகாந்த், ஜெயராம், சுனில், சமுத்திரகனி, பிரகாஷ் ராஜ், பாண்டியராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தில் ராஜூ தயாரிப்பில் உருவாகிய இந்த படம் சுமார் ரூ.250 கோடியில் உருவானதாக கூறப்படும் நிலையில் இந்த படம் கிறிஸ்துமஸ் இருந்தாக வெளியாகும் என்று தகவல் வெளியானது.
ஆனால் தற்போது அதிகாரபூர்வமாக படத்தின் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து சங்கராந்தி தினத்தில் வெளியாகும் என்றும் அதாவது ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல மொழிகளில் வெளியாகும் போது சங்கராந்தி தினம் தான் சரியான ரிலீஸ் தேதியாக இருக்கும் என்று தயாரிப்பு தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ராம் சரண் தேஜா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
సంక్రాంతికి కలుద్దాం! ❤️🔥✊🏼#GameChanger
— Sri Venkateswara Creations (@SVC_official) October 12, 2024
Global Star @AlwaysRamCharan @shankarshanmugh @MusicThaman @advani_kiara @iam_SJSuryah @actorsrikanth @yoursanjali @Naveenc212@AntonyLRuben @DOP_Tirru @artkolla @HR_3555 @ZeeStudios_ @saregamaglobal @saregamasouth @PharsFilm… pic.twitter.com/57Ht1FRW8m
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments