ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' ரிலீஸ் தேதி மாற்றமா? புதிய தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Saturday,October 12 2024]

ஷங்கர் இயக்கத்தில் உருவான ‘கேம் சேஞ்சர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் கிறிஸ்துமஸ் விருந்தாக டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராம்சரண் தேஜா நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் தேவி ஸ்ரீபிரசாத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’. இந்த படம் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் உருவான நிலையில் தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்த படத்தில் கைரா அத்வானி, அஞ்சலி, எஸ் ஜே சூர்யா, ஸ்ரீகாந்த், ஜெயராம், சுனில், சமுத்திரகனி, பிரகாஷ் ராஜ், பாண்டியராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தில் ராஜூ தயாரிப்பில் உருவாகிய இந்த படம் சுமார் ரூ.250 கோடியில் உருவானதாக கூறப்படும் நிலையில் இந்த படம் கிறிஸ்துமஸ் இருந்தாக வெளியாகும் என்று தகவல் வெளியானது.

ஆனால் தற்போது அதிகாரபூர்வமாக படத்தின் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து சங்கராந்தி தினத்தில் வெளியாகும் என்றும் அதாவது ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல மொழிகளில் வெளியாகும் போது சங்கராந்தி தினம் தான் சரியான ரிலீஸ் தேதியாக இருக்கும் என்று தயாரிப்பு தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ராம் சரண் தேஜா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினி படத்திற்கு லாஜிக் பார்க்க முடியாது.. ரஜினி ஹெலிகாப்டரில் வரும் காட்சி குறித்து ஞானவேல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் பெரும்பாலும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள்

368 எபிசோடுகளுடன் முடிந்த 'மீனா' சீரியல்.. சன் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய சீரியல் என்ன?

சன் டிவியில் காலை திங்கள் முதல் சனி வரை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த 'மீனா' தொடர் 368 எபிசோடுகளுடன் நேற்றுடன் முடிவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

காதல்ல பட்டைய கிளப்புனும்.. பிக்பாஸ் லாஸ்லியாவின் 'மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்' டீசர்..!

பிக் பாஸ் லாஸ்லியா நடித்த மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்' என்ற திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் 'கோட்' திரைப்படம்.. கண்டு ரசிக்கும் குடும்ப ஆடியன்ஸ்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகி ரூ.450 கோடிக்கு மேல் திரையரங்குகளில் வசூல் ஆனது என்பது தெரிந்தது. திரையரங்கில் மாபெரும் வெற்றி பெற்ற

ஆயுத பூஜை ஸ்பெஷல்: நயன்தாராவின் ரொமான்ஸ் புகைப்படங்கள் வைரல்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தனது கணவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்ஸ் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்குகள் குவிந்து கொண்டிருக்கின்றன.