ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' நாயகியின் புதிய போஸ்டர்.. இன்று என்ன விசேஷம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’கேம் சேஞ்சர்’ படத்தில் நாயகியாக நடித்துள்ள கைரா அத்வானியின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்த, ’இந்தியன் 2’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் மற்றொரு திரைப்படமான 'கேம் சேஞ்சர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அதன் பிறகு இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ராம் சரண் தேஜா நாயகனாக நடித்து வரும் இந்த படத்தில் கைரா அத்வானி நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் மேலும் இந்த படத்தில் அஞ்சலி, எஸ்ஜே சூர்யா, ஸ்ரீகாந்த், ஜெயராம், சுனில், சமுத்திரகனி, பிரகாஷ்ராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் தமன் இசையில் தில் ராஜு தயாரிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 250 கோடி என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நியூசிலாந்து உள்பட ஒரு சில வெளிநாடுகளிலும் படமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி கைரா அத்வானி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் வகையில் ’கேம் சேஞ்சர்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரை அடுத்து ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Team #GameChanger wishes our Jabilamma Aka @advani_kiara a very Happy Birthday ❤️
— Sri Venkateswara Creations (@SVC_official) July 31, 2024
Her vibrant energy will soon enchant your hearts 💥
Mega Powerstar @AlwaysRamCharan @shankarshanmugh @MusicThaman @DOP_Tirru @artkolla @SVC_official @ZeeStudios_ @zeestudiossouth @saregamaglobal… pic.twitter.com/PJMkzLTX4y
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments