'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் ஷங்கர் பட நாயகன்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Saturday,May 27 2023]

’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளரின் அடுத்த திரைப்படத்தில் ஷங்கர் படத்தில் நடித்து வரும் நாயகன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரூபாய் 15 கோடியில் உருவாக்கப்பட்ட இந்த படம் ரூ.340 கோடி வசூல் ஆனது என்பதும் பெரும் சர்ச்சைகளுக்கு இடையே இந்த படம் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தை தயாரித்த அபிஷேக் அகர்வாலின் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் என்ற நிறுவனத்தின் அடுத்த திரைப்படத்தில் ராம்சரண் நடிக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’கேம் சேஞ்சர்’ என்ற படத்தின் நாயகனாக நடித்து வரும் ராம்சரண் தேஜாவின் அடுத்த படம் ’தி காஷ்மீர் பைல்ஸ்’ போல் சர்ச்சைக்குரிய படமாக இருக்குமா? அல்லது ராம்சரண் தேஜாவின் மாஸ் படமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை காலை 11.11 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.