இந்த மூன்றில் ஒன்று தான் எனது அடுத்த படம்.. அதில் ஒன்று ஜேம்ஸ்பாண்ட் கதையா? ஷங்கர் தந்த ஆச்சரியம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர் இயக்கத்தில் உருவாகி வரும் இன்னொரு படமான ராம்சரணின் ‘கேம் சேஞ்சர்’ படமும் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் 10 முதல் 12 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டிய நிலை இருப்பதாகவும் ’இந்தியன் 2’ படத்தின் ரிலீஸ்க்கு பின்னர் ’கேம் சேஞ்சர்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஷங்கர் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று சமீபத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் தான் மூன்று ஐடியாக்களை வைத்திருப்பதாகவும் அதில் ஒன்று தான் தனது அடுத்த படம் என்றும் கூறியுள்ளார்.
ஒன்று வரலாற்று கதை அம்சம் கொண்ட படம், இன்னொன்று ஜேம்ஸ்பாண்ட் பாணியில் உருவாக உள்ள படம், மூன்றாவதாக சயின்ஸ் பிக்சன் படம். இந்த மூன்றுமே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் படங்கள், குறிப்பாக அதிக அளவு கிராபிக்ஸ் காட்சிகள் கொண்ட படமாக இருக்கும்’ என்றும் ஷங்கர் தெரிவித்தார். மேலும் அவர் தனது அடுத்த படத்தில் புதிய டெக்னாலஜிகளை, அதாவது இதுவரை சினிமாவில் பயன்படுத்தப்படாத டெக்னாலஜிகளை பயன்படுத்த இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஷங்கரின் இந்த பேட்டிக்கு கருத்து தெரிவித்து வரும் ரசிகர்கள் ஜேம்ஸ் பாண்ட் பாணியில் ஒரு படத்தை எடுங்கள், இந்தியாவில் இதுவரை யாரும் அப்படி பிரமாண்டமாக ஜேம்ஸ்பாண்ட் பாணியில் படம் எடுக்கவில்லை என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஷங்கரின் அடுத்த படம் ஜேம்ஸ் பாண்ட் பாணியில் உள்ள படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Director Shankar about his upcoming movies:
— AmuthaBharathi (@CinemaWithAB) July 1, 2024
- Historical based subject
- JamesBond kind of film
- Science fiction movie called 2012
All are big Budget movies & demand high VFX💥 pic.twitter.com/evqgwLrs7j
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments