106 வயதில் பறந்து பறந்து சண்டை செய்ய முடியுமா? 'இந்தியன் தாத்தா' குறித்து ஷங்கர் கொடுத்த விளக்கம்..!

  • IndiaGlitz, [Wednesday,June 26 2024]

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ’இந்தியன் 2’ திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில் அந்த ட்ரெய்லரின் ஒரு காட்சியில் இந்தியன் தாத்தா பிறந்த வருடம் 1918 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து சமூக வலைதளத்தில் இந்தியன் தாத்தாவுக்கு 106 வயது ஆகிறது, அவர் எப்படி பறந்து பறந்து சண்டை செய்ய முடியும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதே கேள்வியை நேற்று மும்பையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஷங்கர் இடம் கேள்வி எழுப்பியபோது, ஷங்கர் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார், அவர் இதுகுறித்து கூறும்போது, ‘இந்த படத்தில் இந்தியன் தாத்தாவின் வயது 106, இத்தனை வயதை கடந்த ஒருவர் சண்டை போட முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும்.

சீனாவில் மார்ஷியல் ஆர்ட்ஸ் மாஸ்டர் ஒருவர் 106 வயதில் இருக்கிறார். லூசி ஜியோ என்ற பெயரை கொண்ட அவர் தற்போதும் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி மேற்கொண்டு வருகிறார், பறந்து பறந்து அடிப்பார், அனைத்து விதமான சண்டையும் செய்வார், அதேபோல் தான் இந்தியன் தாத்தா சேனாதிபதி கேரக்டர்.

அவர் வர்மக்கலையில் மாஸ்டர், உணவு பழக்கத்தில் கட்டுப்பாடு கொண்டவர், யோகா தியானம் தினமும் செய்வார். தினமும் ஒரு முறை மட்டுமே சாப்பிடுவார், ஒழுக்கம் கட்டுப்பாடு உள்ளவர்கள் மாஸ்டராக இருந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு வயது ஒரு தடை இல்லை, எந்த வயதிலும் எந்தவிதமான சண்டையையும் செய்யலாம்’ என்று இயக்குனர் ஷங்கர் விளக்கம் அளித்துள்ளார்.