விவேக்கின் கடைசி ஆசையை நிறைவேற்றுவாரா ஷங்கர்? 'இந்தியன் 2' படத்தில் திடீர் திருப்பம்..!

  • IndiaGlitz, [Tuesday,February 28 2023]

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகரான விவேக், ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா உட்பட பல பிரபலங்களுடன் நடித்திருந்தாலும் கமல்ஹாசன் உடன் அவர் ஒரு படத்தில் கூட நடிக்காமல் இருந்தார். கமல்ஹாசனுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று விவேக் பல மேடைகளில் பேசிய நிலையில் அவருக்கு ’இந்தியன் 2’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

’இந்தியன் 2’ படத்தில் விவேக் நடித்த முக்கிய காட்சிகள் இடம் பெற்ற நிலையில் திடீரென இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து காரணமாக படபிடிப்பு நிறுத்தப்பட்டது. அதனை அடுத்து விவேக் மாரடைப்பு காரணமாக திடீரென காலமானார்.

இந்த நிலையில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் விவேக் காட்சிகள் நீக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் அவருக்கு பதிலாக வேறு நடிகர் நடிப்பார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் கமல்ஹாசன் உடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற விவேக் ஆசையை நிறைவேற்றும் வகையில் ’இந்தியன் 2’ படத்தில் விவேக்கின் காட்சிகள் இடம்பெறும் என்று படக்குழுவினர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விவேக்கிற்காக டப்பிங் செய்யும் கலைஞரையும் தேடி வருவதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து கமல்ஹாசனுடன் நடிக்க வேண்டும் என்ற விவேக்கின் ஆசை அவரது இறப்பிற்கு பின் நிறைவேற்றப்பட்ட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.