'விருமன்' படம் குறித்து மாஸ் அப்டேட் தந்த அதிதிஷங்கர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் ’விருமன்’ படம் குறித்த மாஸ் அப்டேட்டை பதிவு செய்துள்ள நிலையில் அந்த அப்டேட் தற்போது வைரலாகி வருகிறது.
கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் ’விருமன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மதுரை, தேனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து விட்டதாக அதிதிஷங்கர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் படப்பிடிப்பு முடிவடைந்த தினத்தில் எடுக்கப்பட்ட குரூப் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
’விருமன்’ படத்தின் மூலம் தனது நீண்டநாள் கனவு நிறைவேறி இருப்பதாகவும் ’விருமன்’ படத்தின் குழுவினர்களை தான் மிஸ் செய்வதாகவும் அனைவரும் எனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவர்களாக மாறி உள்ளதாகவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
#viruman completed!This movie has been nothing less than a dream come true. Going to miss the viruman team so much,you all are so close to my heart♥️ @dir_muthaiya @Karthi_Offl @2D_ENTPVTLTD @selvakumarskdop @Suriya_offl @thisisysr pic.twitter.com/gm35ONmMsJ
— Aditi Shankar (@AditiShankarofl) December 22, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments