'அருவி' அதிதிபாலனுக்கு ஷங்கர் பாராட்டு

  • IndiaGlitz, [Monday,December 18 2017]

கடந்த வாரம் வெளிவந்த 'அருவி' படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்று வருகிறது. ஊடகங்களும் விமர்சகர்களும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக இந்த படத்தின் நாயகி அதிதிபாலனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

இந்த நிலையில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் 'அருவி' படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அருவி-மிக மிக நல்ல படம். இயக்குனர் அருண்பிரபுவின் பணி மிகச்சிறப்பானது. அதிதிபாலன் உள்பட உள்பட அனைவரது நடிப்பும் சிறப்பு. பாராட்டுக்கள்' என்று தெரிவித்துள்ளார்.
ஷங்கரின் பாராட்டுக்கு நடிகை அதிதிபாலனும், இயக்குனர் அருண்பிரபுவின் நன்றி தெரிவித்துள்ளனர்.

'அருவி' படம் ஒரு குறிஞ்சிப்பூ என்றும், இந்த படம் நம்மை சிரிக்க, அழுக, சிந்திக்க மற்றும் உணர வைக்கும் படம் என்றும், நாயகி அதிதிபாலன் நடிப்பு அருமை என்றும், வெகுநாட்கள் கழித்து ஒரு மிகச்சிறந்த படம் என்றும் ரசிகர்கள் ஷங்கரின் பதிவிற்கு கமெண்ட் போட்டு வருகின்றனர்.