கோட்டையை எட்டி பார்க்கும் கமல்ஹாசன்: ஷங்கரின் வித்தியாசமான வாழ்த்து!

  • IndiaGlitz, [Thursday,November 07 2019]

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 65வது பிறந்த நாளையும் சினிமாவில் அறிமுகமாகி 60 ஆண்டுகள் நிறைவு பெறுவதையும் கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 3’ படத்தை இயக்கி வரும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசனுக்கு தனது டுவிட்டரில் ’இந்தியன் 2’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தான் மாநிலம் குவாலியரில் நடைபெற்று வரும் நிலையில் அங்குள்ள கோட்டை ஒன்றில் இந்தியன் தாத்தா கமல்ஹாசன் நின்றபடி உள்ள ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ராஜஸ்தானில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது குவாலியரில் இந்த படத்தின் பிரமாண்டமான சண்டைக் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர் ஹெயின் நவீன தொழில்நுட்பத்துடன் இந்த சண்டைக் காட்சியை அமைத்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்த பின்னர் குவாலியரில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

More News

காற்று மாசால் கடவுளுக்கும் மாஸ்க் அணிவித்த பக்தர்கள்

கடந்த சில நாட்களாக டெல்லியில் காற்றின் மாசு அதிகரித்ததை அடுத்து அப்பகுதி மக்கள் கடும் சிரமத்தில் உள்ளனர். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு

ஐ.ஏ.எஸ் அதிகாரியுடன் கள்ளக்காதல்: மாடல் அழகிக்க்கு ரூ.70 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்

திருமணமான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்த மாடல் அழகி ஒருவர், ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவிக்கு நஷ்ட ஈடாக ரூ.70 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

உலகின் கவர்ச்சியான செவிலியர் இவர்தான்!

ஒருசில மருத்துவமனைகளில் உள்ளே சென்றாலே ஏன் இங்கு வந்தோம் என்ற அளவுக்கு கொடூரமாக இருக்கும். ஆனால் சில மருத்துவமனைகளில் நுழைந்தால் மருத்துவமனை போல் இல்லாமல் ஒரு ஸ்டார் ஹோட்டல் போல் இருக்கும்.

64 நாட்கள் தொடர் படப்பிடிப்பு: முடிவுக்கு வந்த தனுஷின் அடுத்த படம்

தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று, தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள்

நடிகர் சங்கத்திற்கும் தனி அதிகாரி: தமிழக அரசு அதிரடி

விஷால் தலைமையான தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனி அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமனம் செய்தது என்பதும் அதன் பின்னர் பாரதிராஜா, எஸ்வி சேகர் உள்ளிட்ட வழிகாட்டும் குழு ஒன்றையும் தமிழக அரசு நியமனம் செய்தது