'ஆர்சி 15' படத்திற்கு பொருத்தமான டைட்டிலை தேர்வு செய்த ஷங்கர்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகி வரும் ‘ஆர்சி 15’ படத்தில் ராம்சரண் தேஜா இரண்டு வேடங்களில் நடித்து வருவதாகவும், கியாரா அத்வானி நாயகியாக நடித்து வருகிறார் என்பதையும் பார்த்தோம். இந்தப் படத்தில் பிரபல நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமன் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும், இந்த ஆண்டுக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ராம் சரண் தேஜா ஐஏஎஸ் அதிகாரி கேரக்டரில் நடித்து வருவதால் இந்த படத்திற்கு ’அதிகாரி’ என்ற டைட்டில் வைக்க ஷங்கர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தெலுங்கில் இந்த படம் உருவாகி வந்தாலும் தமிழ் உள்பட பான் இந்தியா திரைப்படமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அனைத்து மொழிகளுக்கும் இந்த டைட்டில் பொருத்தமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.