ஷங்கரின் பத்து நிமிட டெக்னிக்கால் மகிழ்ச்சி அடைந்த லைகா நிறுவனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் '2.0'. இந்த படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை தள்ளி வைக்கப்பட்டு தற்போது நவம்பர் 29ஆம் தேதி என உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த படத்தின் உரிமையை பெற அட்வான்ஸ் தொகை கொடுத்திருந்த விநியோகிஸ்தர்கள் இந்த படம் காலதாமதமாகி வருவதை அறிந்தவுடன் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திருப்பி கேட்டுள்தாக கூறப்பட்டது. கிராபிக்ஸ் பணிகள் காரணமாக காலதாமதம் ஆகியதாகவும், இதற்கு தாங்கள் முழு பொறுப்பு ஏற்பதாகவும் ஒப்புக்கொண்ட லைகா நிறுவனம் பணத்தை திருப்பி தரவும் ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது
இந்த இடத்தில் தான் ஷங்கரின் டெக்னிக் ஆரம்பமானதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் உரிமையை பெற அட்வான்ஸ் கொடுத்தவர்களை அழைத்த ஷங்கர், இந்த படத்தில் இடம்பெற்ற பத்து நிமிட காட்சிகளை திரையிட்டு காண்பித்ததாகவும், அந்த காட்சிகளின் பிரமாண்டத்தை பார்த்து அதிர்ந்த விநியோகிஸ்தர்கள் இந்த படத்திற்காக எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் காத்திருக்க தயார் என்று கூறி அட்வான்ஸ் தொகை அப்படியே இருக்கட்டும் என்று கூறியதாகவும் ஒரு தகவல் கசிந்துள்ளது. ஷங்கரின் இந்த பத்து நிமிட டெக்னிக்கால் லைகா நிறுவனம் மகிழ்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது
'2.0' திரைப்படம் 'பாகுபலி', 'பாகுபலி 2' படங்கள் போன்றே உலக அளவில் மிகப்பெரிய வசூலை பெற்று, பட்ஜெட்டை விட பலமடங்கு வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout