'இந்தியன் 2' படத்தின் மாஸ் அறிவிப்பை வெளியிட்ட ஷங்கர்.. இன்று கமல் ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!

  • IndiaGlitz, [Saturday,April 06 2024]

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ’இந்தியன் 3’ படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ’இந்தியன் 2’ படத்தின் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் சற்றுமுன் இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்டுள்ள நிலையில் கமல் ரசிகர்கள் குஷி ஆகி உள்ளனர் ’

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில், ஒரு வழியாக தற்போது படப்பிடிப்பு முடிவுக்கு வந்து இந்த ஆண்டு வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ’இந்தியன் 2’ படத்தின் தொழில்நுட்ப பணிகள் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் ’இந்தியன் 2’ படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளார். மேலும் இது குறித்த போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் அதில் ’ஊழல் என்பது ஒரு நாட்டின் புற்றுநோய் போல், ஊழலை ஒழிக்க வேண்டும்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் அப்டேட் என்னவாக இருக்கும் என்பதை இன்று மாலை 6 மணி வரை பொறுத்து இருந்து பார்ப்போம்.

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்த ‘இந்தியன் 2’ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.