'இந்தியன் 2' படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட இயக்குனர் ஷங்கர்.. இன்னொரு மாஸ் அப்டேட்..!

  • IndiaGlitz, [Monday,May 20 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன் 2 ’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் உட்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரிலீஸ் தேதி தாமதம் ஆகலாம் என்று செய்தி வெளியாகியது. இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் ’இந்தியன் 2’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதோடு இன்னொரு மாஸ் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது கமல்ஹாசன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'இந்தியன் 2’ திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகும் என்று ஷங்கர் அறிவித்த நிலையில் நாளை மறுநாள் அதாவது மே 22ஆம் தேதி இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். நாளை மறுநாள் சிங்கிள் பாடல் வெளியாகும் என்ற ட்விஸ்டை ஷங்கர் அறிவித்தது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அனிருத் கம்போஸ் செய்த அந்த பாடலைக் கேட்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பாடல் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.

More News

'தக்லைஃப்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே? யார் யார் கலந்து கொள்கிறார்கள்?

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் நீண்ட இடைவேளைக்கு பிறகு இணைந்த 'தக்லைஃப்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும்,

கமல்ஹாசனின் 'கல்கி 2898ஏடி' திரைப்படத்தில் திடீரென இணைந்த கீர்த்தி சுரேஷ்.. என்ன கேரக்டர்?

பிரபல நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் 'கல்கி 2898ஏடி' திரைப்படத்தில் கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படம் ஜூன் 27ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள

பிரபல ஹீரோவுக்காக அனிருத் கம்போஸ் செய்த பாடல்.. முதல் முறை கேட்கும்போதே ஆட்டம் தான்..!

இசையமைப்பாளர் அனிருத் பிரபல ஹீரோவின் படத்திற்காக கம்போஸ் செய்த பாடல் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இந்த பாடலை முதல் முறை கேட்கும் போதே ஆட்டம் போட வைக்கிறது என்று ரசிகர்கள் கருத்து

கமல்ஹாசனிடம் தேதி கேட்க லிங்குசாமிக்கு உரிமையே இல்லை.. 'உத்தம வில்லன்' விவகாரம் குறித்து தயாரிப்பாளர்..!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்த 'உத்தமவில்லன்' என்ற திரைப்படம் தோல்வி அடைந்த நிலையில் அந்த நஷ்டத்தை ஈடுகட்ட கமல் தங்கள் நிறுவனத்திற்கு ஒரு

எஸ்.எஸ்.ராஜமெளலி - மகேஷ் பாபு படத்தின் வில்லன்.. ரூ.150 வசூல் படம் கொடுத்த பிரபல ஹீரோவா?

பிரமாண்ட இயக்குனர்  எஸ்.எஸ்.ராஜமௌலி  தற்போது மகேஷ் பாபு நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகளில் உள்ளார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும்