close
Choose your channels

ஷங்கர் - ராம்சரண் தேஜா படத்தின் டைட்டில் இதுவா? அனைத்து மொழிகளுக்கும் ஒரே டைட்டில்?

Wednesday, March 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ மற்றும் ராம்சரண் தேஜா நடித்துவரும் ’ஆர்சி 15’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன என்பதும் ஒரே நேரத்தில் மாறி மாறி இந்த இரண்டு படங்களையும் ஷங்கர் இயக்கி வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் ’ஆர்சி 15’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது. இந்த படத்தில் ராம்சரண் தேஜா தலைமை தேர்தல் அதிகாரியாக நடித்து வருவதாக ஏற்கனவே தகவல் கசிந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு ’CEO’ அதாவது Chief electoral officer என்ற டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் டைட்டில் அதிகாரபூர்வமாக மார்ச் 27ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் வெளியாகும் என்றும் மேலும் இந்த ஃபர்ஸ்ட் போஸ்டரில் ரிலீஸ் செய்தியும் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ராம்சரண் தேஜா ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கும் இந்த படத்தில் அஞ்சலி, ஜெயராம், நாசர், சமுத்திரகனி, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சுமார் ரூ.170 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தமிழ் தெலுங்கு உள்பட பான் இந்தியா திரைப்படம் ஆக வெளியாவதால் அனைத்து மொழிகளுக்கும் ’CEO’ என்ற டைட்டில் தான் வைக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment