close
Choose your channels

ஷங்கர் படத்தில் ராம்சரணுக்கு இந்த அதிகாரியின் கேரக்டரா?

Tuesday, November 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடித்து வரும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் ராம்சரண்தேஜா ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி லக்ஷ்மி நாராயணன் அவர்களின் கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் தனது அதிரடி மூலம் கலக்கிய லட்சுமி நாராயணா அவர்கள் தனது பதவி காலத்தில் சத்யம் மோசடி மற்றும் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளை விசாரணை செய்தார் என்பதும் கடந்த 2019ஆம் ஆண்டு அவர் பவன் கல்யாணின் ஜன சேனா என்ற கட்சியில் இணைந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காவல்துறை அதிகாரியாக இருந்து அதன் பின்னர் அரசியலுக்கு அவதாரமெடுத்த கேரக்டரில்தான் ராம்சரண் தேஜா நடித்து வருகிறார் என்று ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் லட்சுமி நாராயணன் அவர்களின் கேரக்டரில் நடித்து வருகிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ராம்சரண் தேஜா ஜோடியாக கைரா அத்வானி நடித்து வரும் இந்த படத்தில் ஸ்ரீகாந்த், அஞ்சலி, சுனில் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment