மீண்டும் பிரமாண்டம்: ஷங்கர் இயக்கிய பாடலில் இத்தனை நடனக்கலைஞர்களா?

தமிழ் திரையுலகை பொறுத்தவரை ஷங்கர் என்றால் பிரமாண்டம், பிரமாண்டம் என்றால் ஷங்கர் என்று தான் கூறபட்டு வருகிறது. குறிப்பாக அவரது படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

அந்த வகையில் தற்போது அவர் இயக்கி வரும் ராம் சரண் தேஜாவின் படத்தில் ஆயிரம் நடனக் கலைஞர்களுடன் ஒரு பாடலை படமாக்கி உள்ளதாக கூறப்படுவது திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா, கியாரா அத்வானி உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’ஆர்சி 15’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் ஒரு பாடலின் படப்பிடிப்பு முடிந்ததாகவும் இந்த பாடலுக்கு கணேஷ் ஆச்சர்யா என்பவர் நடன இயக்குனராக பணி புரிந்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பாடலுக்கு சுமார் 1000 நடனக் கலைஞர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் இந்த பாடல் பஞ்சாபில் மூன்று நாட்களும் ஐதராபாத்தில் 6 நாட்களும் படமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெறும் ஒரு ஆக்ஷன் காட்சியில் 1200 ஸ்டண்ட் கலைஞர்கள் பணிபுரிவதாக தகவல் வெளியான நிலையில் தற்போது 1000 நடனக் கலைஞர்களுடன் ஒரு பாடலை உருவாக்கி இருப்பதை அடுத்து ஷங்கரின் படங்களில் இந்த படம் பிரமாண்டத்தின் உச்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்த படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி விஜய்யின் ‘வாரிசு’ உள்பட ஒருசில படங்களை தயாரித்து வரும் தில்ராஜூ தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் அடுத்தாண்டு ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய்சேதுபதியா? வில்லன் சேதுபதியா? மேலும் இரண்டு பிரபலங்களின் படத்தில் வில்லன்?

நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

'ராக்கெட்டரி' படத்தில் பணிபுரிந்த கே.பாலசந்தர் பட நடிகை: இவருடைய பாட்டியும் நடிகைதான்!

நடிகர் மாதவன் நடித்து தயாரித்து இயக்கிய 'ராக்கெட்டரி' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் பழம்பெரும் நடிகை ஒருவரின் பேத்தியும், கே பாலச்சந்தர்

வேஷ்டி காஸ்ட்யூம், செம லுக்கில் மாளவிகா மோகனன்: வைரல் புகைப்படம்!

தளபதி விஜய்யுடன் 'மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்த நடிகை மாளவிகா மோகனன் வேஷ்டி காஸ்ட்யூமில் செம லுக்கில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த நிலையில் அந்த பதிவு வைரலாகி வருகிறது. 

நடிகைகளுக்கு இணையாக செம ஆட்டம் போட்ட விளையாட்டு வீராங்கனை: வைரல் வீடியோ

நடிகைகள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் நடனமாடும் வீடியோக்களை பதிவு செய்து வருவார்கள் என்பதும் அந்த வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வரும் என்பதும் தெரிந்ததே

லீலா மணிமேகலைக்கு நீதிமன்றம் எச்சரிக்கை: இது 'காளி' விவகாரம் அல்ல, இயக்குனர் விவகாரம்!

கடந்த இரண்டு நாட்களாக லீனா மணிமேகலை இயக்கிய 'காளி' என்ற ஆவணப் படத்தின் போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என்பதும் 'காளி' வேடத்தில் இருக்கும் பெண் ஒருவர் வாயில்