ஷங்கரின் பிரமாண்டம்.. ராம் சரணின் மாஸ் ஆக்சன்.. 'கேம் சேஞ்சர்' டிரைலர் ரிலீஸ்..!
- IndiaGlitz, [Thursday,January 02 2025]
ஷங்கரின் பிரம்மாண்டம் மற்றும் ராம்சரண் தேஜாவின் அதிரடி ஆக்சன் நடிப்பில் உருவாகிய ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் வரும் பத்தாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல இயக்குனர் ராஜமவுலி என்ற டிரைலரை வெளியிட்டுள்ள நிலையில், இந்த ட்ரெய்லரில் ஷங்கருக்கே உள்ள பிரம்மாண்டம் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. அதேபோல், ராம்சரணுக்கே உரிய அதிரடி ஆக்சன் காட்சிகள் கவர்ச்சி மழையில் கியாரா அத்வானி, அட்டகாசமான வில்லன் நடிப்பில் எஸ். ஜே. சூர்யா மற்றும் குணச்சித்திர நடிப்பில் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராம்சரண் தேஜா, இந்த படத்தில் அப்பா, மகன் என்ற இரண்டு கேரக்டரில் நடித்துள்ளார். அப்பா ராம்சரணுக்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் மகன் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளனர் என்பது ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.
‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மிகவும் பிரமாண்டமாகவும், கோடி கணக்கில் செலவு செய்து எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், அதிரடி ஆக்சன் காட்சிகள் மற்றும் கோடிக்கணக்கில் செலவு செய்த கிராபிக்ஸ் காட்சிகள் ஆகியவை தென்னிந்திய சினிமாவுக்கே புதிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் வெளியாகும் நிலையில், இந்த ட்ரெய்லர் படத்தின் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.