'பவர்பாண்டி' தனுஷூக்கு வாழ்த்து கூறிய இருமேதைகள்

  • IndiaGlitz, [Sunday,April 23 2017]

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயாசிங் நடித்த 'பவர்பாண்டி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.மேலும் இந்த படத்தை ரஜினிகாந்த் உள்பட கோலிவுட் பிரபலங்களும் பாராட்டி வருவதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் தனுஷூக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 'பவர் பாண்டி' மனதை தொடும் ஒரு எளிய படைப்பு. தனுஷின் டீமுக்கு வாழ்த்துக்கள். ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா உள்பட அனைவரும் நடிப்பும் அருமை' என்று ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டியுள்ளார்.

அதேபோல் மற்றொரு பிரபல இயக்குனரான கவுதம் மேனன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'இயக்குனர் குடும்பத்திற்கு தனுஷை வரவேற்கின்றோம். ஒவ்வொரு பெற்றோர்களும் குழந்தைகளும் பார்க்க வேண்டிய படம் 'பவர்பாண்டி'. தனுஷூக்கு ஒரு வேண்டுகோள். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் இயக்குங்கள். பவர்பாண்டி மற்றும் பூந்தென்றலுக்கு அடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்க ஆவலுடன் உள்ளோம்' என்று கூறியுள்ளார்.

கோலிவுட்டின் இரண்டு பெரிய மேதைகள் தனுஷ் இயக்கிய முதல் படத்தை பாராட்டியதே அவர் இயக்குனர் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டார் என்பதை நிரூபித்துள்ளது.

More News

அட்லியின் அடுத்த படத்தில் கமல்ஹாசன்

'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி, இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' என்ற வெற்றி படத்தை இயக்கியதோடு தற்போது 'தளபதி 61' படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது...

'விஸ்வரூபம் 2' படம் குறித்து கமல்ஹாசனின் முக்கிய அறிவிப்பு

உலகநாயகன் கமல்ஹாசனின் வெற்றி படங்களில் ஒன்றான 'விஸ்வரூபம்' திரைப்படத்தின் இரண்டாம் பாகமான 'விஸ்வரூபம் 2' படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் ஆரம்பித்துவிட்டதாக வெளிவந்த செய்தியை சமீபத்தில் பார்த்தோம். எனவே இந்த படம் வெகுவிரைவில் வெளியாக வாய்ப்புள்ள நிலையில் இந்த படம் குறித்த முக்கிய தகவல் ஒன்றை கமல் தனது 

விவசாயிகள் போராட்டத்தில் நானும் பங்கேற்கவுள்ளேன். பிரபல நடிகை

தமிழக விவசாயிகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பல்வேறு நூதன முறையில் தலைநகர் டெல்லியில் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றுகூட சிறுநீர் குடிக்கும் போராட்டம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த போராட்டத்தில் தானும் கலந்து கொள்ளவிருப்பதாக கடந்த 90களில் பிரபலமாக இருந்த நடி&

பரபரப்பை ஏற்படுத்தி வரும் ரஜினியின் அரசியல் போஸ்டர்

சமீபத்தில் பதவியேற்ற உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் தன்னலமற்ற, அதிரடியான நடவடிக்கைகளால் அம்மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆரம்பத்தில் இவரது உடையை பார்த்து ஒரு மத அடையாளமுள்ள தலைவராக மக்கள் கருதினர். ஆனால் தற்போது அவரது நடவடிக்கை பிற மதத்தினர்களும் போற்றும் வகையில் உள்ளது. மேலும் தமிழ&

விவசாயிகளுக்காக நடைபெறும் ஏப்ரல் 25 போராட்டம்: நடிகர் சங்கம் முக்கிய முடிவு

சமீபத்தில் திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஏப்ரல் 25ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.