வீண்போகாத தோனியின் நம்பிக்கை: அடிச்சு தூக்கிய வாட்சன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் இறுதி போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி விளையாடியபோது அபாரமாக சதமடித்து சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் பெற பெரிதும் காரணமாக இருந்தவர் ஷேன் வாட்சன். முதல் பத்து பந்துகளில் ரன் ஏதும் அடிக்காமல் இருந்த வாட்சன் அதன்பின்னர் ரஷித்கான் பந்து உள்பட ஐதராபாத் பந்துவீச்சாளர்களின் பந்துகளை துவம்சம் செய்து சதமடித்தார்.
ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் கடந்த பத்து போட்டிகளில் ஒரு போட்டியில் கூட ஷேன் வாட்சன் அரைசதம் கூட அடிக்கவில்லை. டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் அவர் 44 ரன்கள் அடித்தார். மற்ற போட்டிகளில் அவர் தனது விக்கெட்டை ஆரம்பத்திலேயே பறிகொடுத்தார். இதனால் வாட்சன் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது மட்டுமின்றி அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் கருத்துக்கள் எழுந்தன.
ஆனால் தல தோனி மட்டும் வாட்சன் மீது அபார நம்பிக்கை வைத்திருந்தார். அவர் ஒருவர் மீது நம்பிக்கை வைத்து ஒரு முடிவை எடுத்துவிட்டால், எந்த காரணத்தை கொண்டும் அந்த முடிவை மாற்ற மாட்டார். முக்கியமான போட்டியில் கண்டிப்பாக வாட்சன் அடித்து நொறுக்கி வெற்றிக்கு உதவுவார் என்று வாட்சன் மீது அவர் வைத்திருந்த அபார நம்பிக்கை வீண்போகவில்லை.
நேற்றைய ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுவிடும் என்ற முக்கியமான ஆட்டத்தில் வாட்சன் விஸ்வரூபம் எடுத்தார். குறிப்பாக ரக்ஷித்கான், சந்தீப் சர்மா பந்துகளை பொளந்து கட்டினார். 4 ஓவரில் 44 ரன்கள் என்பது ரஷீத்கான் டி20 சரித்திரத்திலேயே இருந்திருக்காது. அதேபோல் சந்தீப்சர்மா பந்துகளில் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறந்தன. சதத்தை மிஸ் செய்தாலும் 53 பந்துகளில் வாட்சன் அடித்த 96 ரன்கள் சிஎஸ்கே வெற்றிக்கு பெரிதும் காரணமாக இருந்தது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் பெற வாட்சன் தனது அதிரடியை தொடர்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments