வீண்போகாத தோனியின் நம்பிக்கை: அடிச்சு தூக்கிய வாட்சன்!

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் இறுதி போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி விளையாடியபோது அபாரமாக சதமடித்து சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் பெற பெரிதும் காரணமாக இருந்தவர் ஷேன் வாட்சன். முதல் பத்து பந்துகளில் ரன் ஏதும் அடிக்காமல் இருந்த வாட்சன் அதன்பின்னர் ரஷித்கான் பந்து உள்பட ஐதராபாத் பந்துவீச்சாளர்களின் பந்துகளை துவம்சம் செய்து சதமடித்தார்.

ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் கடந்த பத்து போட்டிகளில் ஒரு போட்டியில் கூட ஷேன் வாட்சன் அரைசதம் கூட அடிக்கவில்லை. டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் அவர் 44 ரன்கள் அடித்தார். மற்ற போட்டிகளில் அவர் தனது விக்கெட்டை ஆரம்பத்திலேயே பறிகொடுத்தார். இதனால் வாட்சன் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது மட்டுமின்றி அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் கருத்துக்கள் எழுந்தன.

ஆனால் தல தோனி மட்டும் வாட்சன் மீது அபார நம்பிக்கை வைத்திருந்தார். அவர் ஒருவர் மீது நம்பிக்கை வைத்து ஒரு முடிவை எடுத்துவிட்டால், எந்த காரணத்தை கொண்டும் அந்த முடிவை மாற்ற மாட்டார். முக்கியமான போட்டியில் கண்டிப்பாக வாட்சன் அடித்து நொறுக்கி வெற்றிக்கு உதவுவார் என்று வாட்சன் மீது அவர் வைத்திருந்த அபார நம்பிக்கை வீண்போகவில்லை.

நேற்றைய ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுவிடும் என்ற முக்கியமான ஆட்டத்தில் வாட்சன் விஸ்வரூபம் எடுத்தார். குறிப்பாக ரக்ஷித்கான், சந்தீப் சர்மா பந்துகளை பொளந்து கட்டினார். 4 ஓவரில் 44 ரன்கள் என்பது ரஷீத்கான் டி20 சரித்திரத்திலேயே இருந்திருக்காது. அதேபோல் சந்தீப்சர்மா பந்துகளில் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறந்தன. சதத்தை மிஸ் செய்தாலும் 53 பந்துகளில் வாட்சன் அடித்த 96 ரன்கள் சிஎஸ்கே வெற்றிக்கு பெரிதும் காரணமாக இருந்தது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் பெற வாட்சன் தனது அதிரடியை தொடர்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது

More News

வதந்தி உண்மையாகிறது: 'தளபதி 63' படத்தில் 'ஷாருக்கான்'

ஷாருக்கான், 'தளபதி 63' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பார் என்றும், அல்லது 'மெர்சல்' இந்தி ரீமேக்கில் நடிப்பார் என்று கூறப்பட்டது

26 நாள் சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம்... 'மே' 4ம் தேதி முதல் ஆரம்பம்!

ஒவ்வொரு வருடமும் அக்னி நட்சத்திரம் (அல்லது) கத்திரி வெயில் என்று அழைக்கப்படும், அதிக வெட்பம் மிகுந்த நாட்கள், இந்த வருடம் மே 4ம் தேதி முதல் துவங்க உள்ளது.

பாலாஜி வழக்கில் திடீர் திருப்பம்! மகள் விஷயத்தில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் படத்தில் காமெடியனாக நடித்து பிரபலமானவர் தாடி பாலாஜி.

தமிழக தங்கமகள் கோமதிக்கு தலைவர்கள் வாழ்த்து

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் மகளிர் ஓட்டப்பந்தயம் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளார்.

கடற்கரை டூ கடற்கரை: சென்னையில் முதல் சுற்றுவட்ட ரயில் சேவை தொடக்கம்

சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம் வழியாக மீண்டும் சென்னை கடற்கரைக்கு செல்லும் சுற்றுவட்ட ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.