ஜின் தயாரிப்பை நிறுத்திவிட்டு கைகழுவும் சானிடைசர் தயாரிக்கும் கிரிக்கெட் வீரர்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே தனக்கு சொந்தமான மதுபான ஆலையில் மதுபானங்களை தயாரிப்பதை நிறுத்திவிட்டு கை கழுவும் சானிடைஸர்கள் தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளார்.
உலக அளவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி கொண்டே வருவதால் மாஸ்குகள் மற்றும் சானிடைஸர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அடிக்கடி கைகளை சுத்தம் செய்வதால் அனைவருக்கு சானிடைஸர்கள் அதிகம் தேவைபப்டுகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னே, தன்னுடைய மதுபான ஆலையில் ஜின் தயாரிப்பதை நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக சானிடைஸர் தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
மாஸ்குகள் மற்றும் சானிடைஸர்களை அதிகம் தயாரிக்க வேண்டும் என்று சானிடைஸர்கள் தயாரிக்கும் உள்ளூா் நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமா் வேண்டுகோள் விடுத்ததை அடுத்தே ஷேர்ன்வார்னே இந்த முடிவை எடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியபோது, ஆஸ்திரேலியா தற்போது பெரும் சவாலை சந்தித்து வருகிறது. அரசின் வேண்டுகோளுக்கு இணங்கி சுகாதாரத் துறைக்கு உதவும் வகையில் என்னால் முடிந்த இந்த நடவடிக்கையை எடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments