தனுஷ், விக்ரம் பிரபுவை அடுத்த 3வது படத்தில் ஷாம்லி?

  • IndiaGlitz, [Monday,September 07 2015]

அஜித்தின் மனைவி ஷாலினியின் தங்கை ஷாம்லி, விக்ரம் பிரபு நடிக்கும் 'வீரசிவாஜி' என்ற படத்திலும், துரை செந்தில்குமார் இயக்கும் ஒரு படத்தில் தனுஷுக்கு ஜோடியாகவும் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இந்நிலையில் மலையாள படம் ஒன்றிலும் நடிக்க ஷாமிலி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன..

மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்த பிரபல நடிகர் குஞ்சக்கோ போபன் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க ஷாம்லி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'Valleem Thetti Pulleem Thetti' என்ற தலைப்பில் வெளிவரவுள்ள இந்த படத்தில் ஷாமிலியின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று இணையதளங்களில் வெளியாகியுள்ளது. தனது மனைவியின் தங்கையுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கான புகைப்படத்தை அஜீத்தே எடுத்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.

ரிஷி சிவகுமார் இயக்கவுள்ள இந்த படத்தில் எஸ்.குமார் ஒளிப்பதிவாளராகம், சூரஜ் எஸ்.குருப் இசையமைப்பாளராகவும் பணிபுரியவுள்ளனர். ஏற்கனவே இரண்டு தமிழ் படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ள ஷாமிலி தற்போது மூன்றாவது படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

செப். 11 க்குள் புலி சென்சார். 'யூ' சர்டிபிகேட் கிடைக்குமா?

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'புலி' படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில்..

கேன்சர் சிறுமிக்கு ரூ.25 லட்சம் கொடுத்து உதவிய அஜித்?

அஜீத் ஒரு நல்ல நடிகராக மட்டுமின்றி பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவர் என்பதை நாம் பல சம்பவங்களின் மூலம் அறிந்திருக்கின்றோம்....

மார்க்கண்டேய நடிகர் சூர்யாவுக்கு இன்று வயது 18

தமிழ் சினிமாவின் மார்கண்டேயன் நடிகர் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது பழம்பெரும் நடிகர் சிவகுமார். எந்த விதமான கிசுகிசுகளிலும் சிக்காமல் திரையுலகில் கண்ணியமாக வாழ்ந்த ஒருசில நடிகர்களில் ஒருவர்.....

சூர்யா படங்களின் '100 நாட்கள்' திட்டம்

'மாஸ்' படத்தை அடுத்து சூர்யா நடித்து வரும் '24' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது......

'த்ரிஷ்யம்' இயக்குனர் ஜீத்துஜோசப்பின் அடுத்த பட ரிலீஸ் தேதி

ஜீத்துஜோசப் இயக்கிய மலையாள திரைப்படமான 'த்ரிஷ்யம்' மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமின்றி கிட்டத்தட்ட இந்தியாவின் முக்கிய மொழிகள் அனைத்திலும் ரீமேக் செய்யப்பட்டு அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது....