தனுஷ், விக்ரம் பிரபுவை அடுத்த 3வது படத்தில் ஷாம்லி?
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித்தின் மனைவி ஷாலினியின் தங்கை ஷாம்லி, விக்ரம் பிரபு நடிக்கும் 'வீரசிவாஜி' என்ற படத்திலும், துரை செந்தில்குமார் இயக்கும் ஒரு படத்தில் தனுஷுக்கு ஜோடியாகவும் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இந்நிலையில் மலையாள படம் ஒன்றிலும் நடிக்க ஷாமிலி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன..
மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்த பிரபல நடிகர் குஞ்சக்கோ போபன் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க ஷாம்லி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'Valleem Thetti Pulleem Thetti' என்ற தலைப்பில் வெளிவரவுள்ள இந்த படத்தில் ஷாமிலியின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று இணையதளங்களில் வெளியாகியுள்ளது. தனது மனைவியின் தங்கையுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கான புகைப்படத்தை அஜீத்தே எடுத்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.
ரிஷி சிவகுமார் இயக்கவுள்ள இந்த படத்தில் எஸ்.குமார் ஒளிப்பதிவாளராகம், சூரஜ் எஸ்.குருப் இசையமைப்பாளராகவும் பணிபுரியவுள்ளனர். ஏற்கனவே இரண்டு தமிழ் படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ள ஷாமிலி தற்போது மூன்றாவது படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com