மனைவியால் குற்றம் சாட்டப்பட்ட ஷமிக்கு ஆதரவு கொடுத்த தல

  • IndiaGlitz, [Wednesday,March 14 2018]

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி, பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக பகீர் குற்றச்சாட்டை அவரது மனைவி ஹாசின் ஜகான் கூறினார். இதுகுறித்து அவர் காவல்துறையிலும் ஆதாரங்களுடன் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அதில் ‌ஷமியின் சகோதரர் மற்றும் உறவினர்கள் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், கொலை செய்ய முயற்சிப்பதாகவும் ஹாசின் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமின்றி ஷமியின் சகோதரர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்திருந்ததாகவும் ஷமிக்கு பாகிஸ்தான் பெண்ணுடன் தொடர்பு கொண்டிருந்ததால் அவர் மீது சூதாட்ட புகாரும் இருக்கலாம் என்றும் அவர் தனது புகாரில் கூறியிருந்தார்.

மனைவி கூறிய புகாரை ஷமி மறுத்து வந்த நிலையில் அவருக்கு ஆதரவாக தல தோனி குரல் கொடுத்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில், 'வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி நல்லவர். அவரால் தனது நாட்டிற்கும், மனைவிக்கும் துரோகம் செய்ய முடியாது என கூறியுள்ளார்.

இதுகுறித்து தோனி மேலும் கூறியபோது, 'ஷமியை எனக்கு நீண்ட காலமாக தெரியும். ஷமியால் நாட்டிற்கும், அவரது மனைவிக்கும் எந்த துரோகமும் செய்ய முடியாது. இருப்பினும் இது அவரது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை. இதை ஷமிதான் தீர்க்க வேண்டும். இவ்விகாரத்தை ஊடகங்கள் பெரிதுபடுத்த வேண்டாம். இந்த பிரச்சனையில் இருந்து ஷமி விரைவில் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது' என்று கூறினார்.

More News

திடீர் திருப்பம்: பி.எஸ்.என்.எல் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுவிப்பு

பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்களான கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்

விராத்-அனுஷ்கா வாழும் வீட்டின் வாடகை எவ்வளவு தெரியுமா?

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் தேதி இத்தாலியில் நடைபெற்ற விராத் கோஹ்லி, அனுஷ்காவின் திருமணம், இந்திய நட்சத்திரங்களின் மிகச்சிறந்த திருமணங்களில் ஒன்று.

சூர்யாவின் 'NGK' டீசர் எப்போது? தயாரிப்பாளர் தகவல்

நடிகர் சூர்யா நடித்து வரும் 'NGK' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. செல்வராகவன் இயக்கி வரும் இந்த படத்தில் ரகுல்ப்ரித்திசிங் மற்றும் சாய்பல்லவி நடித்து வருகின்றனர்.

ரஜினியிடம் ஆட்டோகிராப் வாங்கிய தாசில்தாரின் அதிரடி முடிவு

ரஜினிகாந்த் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதை பல நிகழ்ச்சிகள் நிரூபித்த நிலையில் தற்போது அவர் ஆன்மீகப்பயணமாக சென்றுள்ள இமயமலை பகுதிகளிலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

ஸ்டீபன் தந்த ஞானதானம்: கமல் பெருமிதம்

இங்கிலாந்து நாட்டு இயற்பியல் விஞ்ஞானியும் சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்த கடவுளின் துகள் என்று போற்றப்பட்டவருமான ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலமானார்.