மனைவியின் குற்றச்சாட்டு உண்மையா? இதோ ஷமியின் விளக்கம்

  • IndiaGlitz, [Wednesday,March 07 2018]

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமியின் மனைவி தனது கணவர் மீது திடுக்கிடும் ஆபாச குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார் என்றும், அவர் வெளியிட்ட ஆபாச ஸ்க்ரீன்ஷாட் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதையும் சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் தியோதர் கோப்பை போட்டியில் தற்போது விளையாடி வரும் ஷமி, மனைவியின் குற்றச்சாட்டுக்கு தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து என் மனைவி கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்துமே பொய். எனக்கு எதிராக மிகப்பெரிய சதி நடந்துள்ளது. எனது புகழையும் எனது விளையாட்டு திறனையும் கெடுக்க நடக்கும் முயற்சியே இது' என்று கூறியுள்ளார்.

ஷமியின் விளக்கத்தை அடுத்து அவருக்கு அவரது ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த நிலையில் ஷமியின் மனைவி குற்றச்சாட்டு கூறிய ஃபேஸ்புக் பக்கம் முடக்கபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.