ஐசியூவில் சிகிச்சை பெற்றுவந்த இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை… பகீர் சம்பவம்!!!

  • IndiaGlitz, [Thursday,October 29 2020]

 

ஹரியாணா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காசநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த 21 வயது இளம் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்று இருக்கிறது. ஃபோர்டிஸ் எனும் மருத்துவமனையில் ஐசியூல் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு சுயநினைவே இல்லாத போது இந்தக் கொடுமை நடைபெற்றதகாவும் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண் சுயநினைவே இல்லாமல் கடந்த 21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி சுயநினைவு திரும்பிய உடனே ஒரு கடிதத்தை தன்னுடைய அப்பாவிற்குக் கொடுத்து இருக்கிறார். அந்தக் கடிதத்தில் மருத்துவமனையில் பணியாற்றி வரும் விகாஸ் என்பவர் தன்னை கற்பழித்து விட்டதாக கூறப்பட்டு உள்ளது. இந்த கடிதத்தை சுஷாந்த் லோக் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் அவருடைய தந்தை ஒப்படைத்து இருக்கிறார்.

ஆனால் இந்நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போதே அந்தப் பெண் மீண்டும் சுயநினைவு இழந்து இருக்கிறார். இதனால் விசாரணையைத் தொடர முடியாத நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் காவல் துறையினருக்குத் தேவையான ஒத்துழைப்பை தர இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.

ஆனால் இந்த பாலியல் வன்கொடுமைக்கு காரணமானர் யார் என்பதைக் குறித்து அறிய முடியாமல் தற்போது போலீசாரும் தவித்து வருகின்றனர். எனவே பாதிக்கப்பட்ட பெண் மீண்டும் சுயநினைவை அடையும் வரை காத்திருக்க வேண்டி வரும் எனவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

More News

மஞ்சள் நிறத்தில் ஆமை? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!!

மஞ்சள் நிறத்தில் உள்ள அரிய வகை ஆமையின் புகைப்படம் ஒன்றை வனத்துறை அதிகாரியான தேபாஷிஷ் சர்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்

மாஸ்டர் நாயகி மாளவிகாவுக்கு என்ன ஆச்சு? நெட்டிசன்களிடையே பரபரப்பு

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தின் நாயகியான மாளவிகா மோகனன் அடுத்ததாக பாலிவுட்டில் ஒரு ஆக்ஷன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பதும்

ராகவா லாரன்ஸ் - ஜிவி பிரகாஷ் படத்தின் அட்டகாசமான டைட்டில்!

'லட்சுமி பாம்'என்ற படத்தை அடுத்து ராகவா லாரன்ஸ் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம்

ஆல்பாஸ் அரியர் செல்லாது: யுஜிசி திட்டவட்டம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு உள்பட பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

சென்னையில் இன்று மாலை வரை கனமழை தொடரும்: தமிழ்நாடு வெதர்மேன்

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் நேற்று முதல் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது